19 April 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வழங்கும், மணிரத்னம்-கமல்ஹாசனின் தக்லைப் படத்தின் முதல் தனிப்பாடல் ஜிங்குச்சா சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், சிலம்பரசன் TR, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி,  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் மற்றும் கமலஹாசன் மீண்டும் இணைவதை குறிக்கும் வகையில் இந்த படம் ஜூன் 5ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இந்த தனிப்பாடல் வெளியீட்டு விழாவில் கமலஹாசன் எழுதிய ஜிங்குச்சா என்ற பாடல் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு மே 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

நிகழ்வில் பேசிய சிலம்பரசன் கூறியதாவது:

“இங்குள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் முன்பே கூறியது போல், கமல்ஹாசன் சார் தான் என் திரை நாயகன். பொதுவாக, மணி சாரும் கமல் சாரும் படப்பிடிப்பு தளத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள், நான் என்ன செய்வது என்று தெரியாமல் நடுவில் இருப்பேன்.

நான் குழந்தை நடிகனாக இருந்ததிலிருந்தே, கமல் சாரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திலிருந்து மிகவும் மாறுபட்ட ஒரு படத்தில் த்ரிஷாவுடன் மீண்டும் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

இந்த நிகழ்வில் நடிகர் கமலஹாசன் பேசியதாவது:

எனக்கும் இயக்குனர் மணிரத்னத்திற்கும் இடையே எதுவும் மாறவில்லை. ஆழ்வார்பேட்டை இரண்டாம் சாலையில் மோட்டார் சைக்கிள் அமர்ந்து கொண்டு நிறைய பேசி இருக்கிறோம். அதில் ஒன்று நாயகன், இன்னொன்று தக் லைஃப் ஆகியிருக்கிறது. இப்போது மீண்டும் இணைந்து இருப்பதற்கு மக்கள்தான் காரணம். அவர்களிடமிருந்து தீர்ப்பு வந்து விட்டால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், என அனைவரும் தலை வணங்கி விடுவார்கள். புதிய நட்சத்திரங்கள் உருவாவது அப்படித்தானே. அப்படித்தான் எஸ்டிஆர் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நானும் ரஜினியும் போஸ்டரில் இருந்த இடத்தில் அப்படித்தானே அவர் தந்தை டி ராஜேந்தர் வந்து கலக்கினார். அதற்கு காரணம் மக்கள்தான். இப்போது நாங்கள் படம் பண்ணுவதற்கும் நீங்கள் தான் காரணம். நாங்கள் இன்னும் நல்ல படம் பண்ணலாம் என்று பேசிப் பேசியே எத்தனை வருடங்களாக சேர்ந்து படம் பண்ணாமல் இருந்து விட்டோம்.

அவர் மேலும் கூறியதாவது

மணிரத்னம் முதல்முறையாக எங்கள் ராஜ்கமல் நிறுவனத்திற்கு படம் செய்திருக்கிறார். இதில் எல்லாம் இருக்கிறது. ஆனால், வேறு மாதிரி இருக்கும். எடுத்த சினிமாவே எடுத்துக் கொண்டிருக்க முடியுமா? நீங்களும் பார்த்த சினிமாவே பார்த்துக் கொண்டிருப்பீர்களா? என்று பேசினார்.

Single Release Song link:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *