POSTER

படத்தோட கதை என்னன்னா, 11 ம் நூற்றாண்டு காலத்துல இங்கிலாந்து நாட்டுல, அண்ணன் எப்ப சாவான்?  தின்ன எப்போ காலியாகுங்குற  கதை கணக்கா,  இங்கிலாந்து நாட்டோட ஒரிஜினல் ராஜா வேற நாட்டுல போயி மாட்டிக்கிட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரோட தம்பி தானே ராஜா ஆயிடலாம்னு  நினைக்கிறான். அதுக்கு அவன் கூட இருக்கிற  மந்திரி துணையா இருக்கான்.

POSTER

அண்ணன் மறுபடியும் திரும்பி நாட்டுக்கு  வந்துடகூடாதுன்னு திட்டம் போடுறனுங்க..  அண்ணனை மீட்டு வர்றதுக்கு பணம் தேவைப்படுதுன்னு பொய் சொல்லி மக்களை, குறிப்பா, அந்த நாட்டு saxon இன மக்களை, இரண்டாம் தர குடிமக்களா treat பண்ணி, வாட்டி வதைச்சு வரி வாங்கறான்..

இப்படி ஊரை  அடிச்சி உலையில் போட்டு சொகுசா வாழ நெனக்கிற வில்லனை, அதே நாட்டுல இன்னொரு பகுதியில காட்டுல ஒரு சின்ன பொறுப்புல இருக்குற நம்ம ஹீரோ ராபின் ஹூட்,  வில்லனோட திட்டத்தை தெரிஞ்சிக்கிட்டு கலகம் பண்ணியாவது  தன் இன மக்களையும், நாட்டையும் காக்க முடிவு பண்ணி ஒரு புரட்சியாளரா மாறுறார்.

அந்த கொடுமையான வில்லன் கிட்ட இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாத்துனாரா? இல்ல ஒரிஜினல் ராஜாவே  வந்தாராங்கிறதுதான் மீதி கதை.

நல்ல சில காட்சிகள்:

பயங்கரமான வில் வித்தைக்காரனான  நம்ம ஹீரோ ஓப்பனிங் சீன்லயே வில்லனோட அல்லக்கைய காட்டுல சந்திக்கிறப்பவே  மிரள வைக்கிறார்.

இந்த படம் 1938ல வந்திருந்தாலும் இது ஒரு கலர் படம்(TECHNICOLOR). ‘செட்’டு எல்லாம் கண்கொள்ளா காட்சியாயிருக்கு.

சிங்கத்தோட குகையிலேயே புகுந்து, சிங்கத்தோட பிடரியை உலுக்கிற மாதிரி அரண்மனை விருந்துல  அழையா விருந்தாளியா வந்து மாஸ் என்ட்ரி குடுத்து வில்லனையே ஒரு நிமிஷம் கதிகலங்க வைக்கிறாரு ஹீரோ.

ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு  ரஸ்க் சாப்ட்ற மாதிரின்னு, தனக்கு விரிச்ச வலையில தெரிஞ்சே போய் மாட்டிகிட்டு வில்லன் நடத்துற வில் வித்தை போட்டியில கலந்துக்கிட்டு, மாட்டிக்கிட்டு, பின்னாடி தப்பிச்சி போறாரு….. தப்பிச்சி போறதெல்லாம் செம்ம சீன்.

படத்துல வர்ற கத்தி சண்டையும், கம்பு சண்டையும் சூப்பர். கிளைமாக்ஸ் கத்தி சண்டையில ஒரு long shot அருமை…. அரண்மனை கல் தூண் மேல ஹீரோவுக்கும்  வில்லனோட அல்லக்கைக்கும் நடக்கும் சண்டையில.. படத்தை பாத்துட்டு அந்த சீன் பத்தி comment போடுங்க…

சாமானியர்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடுற ராபின்ஹூட்(ஹீரோ) மாதிரி ஆட்கள் இந்த காலத்துலயும் தேவைதான்.

 

3 அகாடெமி (அ) ஆஸ்கார் அவார்ட் வாங்கியுள்ள படம் இது (Best Interior Decoration, Best Original Score, Best Film Editing)

Poster

Directed by       Michael Curtiz

Starring 

Cinematography

Edited by

Music by

Production
company

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *