NHRC’s Short Film Competition – 2023

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) நடத்தும் குறும்பட  திரைப்பட போட்டி 2023 க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

இந்த போட்டியில் இந்திய பிரஜைகள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.  ஒரு விண்ணப்பம் மூலம் ஒரு படம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

ஒருவரே எத்தனை படங்கள் வேண்டுமானாலும் தனித்தனி விண்ணப்பங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். ஆனால், ஏற்கனவே இதே போட்டிக்கு அனுப்பப்பட்ட படங்களை திரும்ப அனுப்பக்கூடாது.

விண்ணப்பதோடு ஆதார் அட்டை, VOTER ID, PAN CARD, DRIVING LICENS லைசன்ஸ் போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை அனுப்ப வேண்டும்.

  • இந்த போட்டிக்கு அனுப்பப்படும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி இருக்ககூடாது.
  • போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணம் என்று ஏதும் கிடையாது.
  • மனித உரிமைகள் பிரச்சனைகள் பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு படங்கள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்துடன் படத்தை பற்றிய சிறு குறிப்பு அனுப்ப வேண்டும்.
  • இந்திய மொழிகளில், எந்த மொழியிலும் இந்த படம் எடுத்திருக்கலாம். ஆங்கில சப்-டைட்டில் உடன் அனுப்ப வேண்டும். மூன்று நிமிடத்திற்கு குறையாமலும் 10 நிமிடத்திற்கு மிகாமலும் குறும்படத்தின் காலவரையறை இருக்க வேண்டும்.

பிக்சன், டாக்குமென்டரி, அனிமேஷன் எந்த வடிவத்தில் வேண்டுமென்றாலும் இந்தப் படம் இருக்கலாம். 2 GB க்கு மிகாமல் MP4, FULL HD (Full HD (1080p) or 1920X1820p) அளவில் இருப்பது நல்லது.

  • அனுப்ப வேண்டிய கடைசி நாள்: இந்த போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பங்களை, படங்களுடன்  30 செப்டம்பர் 2023 மாலை 6 மணிக்குள்  கிடைக்கும் படி அனுப்பலாம்.
  • google drive folder ல் Short Film Award-2023 தலைப்பிட்டு விபரங்களை குறிப்பிட்டு உங்கள் ஜிமெயில் முகவரியில் இருந்து nhrcshortfilm@gmail.com என்ற மெயில் id க்கு அனுப்பவும்.

Method to apply: a) The applicant should have Gmail account with Google drive access. b) Duly filled-in application form along with requisite documents, Film and its themes and synopsis should be uploaded in the folder of Google drive with title “Short Film Award-2023, ”. The link of the folder of Google drive should be forwarded through Email on NHRC email: – nhrcshortfilm@gmail.com (No hard copy of application or DVD/Pen drive is required). The applicant must write his/her complete postal address, telephone and mobile number in the Email. xii. Mode of dispatch: Entries can be sent online only

தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு முதல் மூன்று இடங்களுக்கு, தலா 2 லட்சம், ஒரு லட்சம், 50 ஆயிரம், என பரிசுத்தொகை மட்டுமல்லாமல் விருதுகள், சான்றிதழ்கள், வழங்கப்படுவதோடு  மேலும் JURY களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பு திரைப்படங்களுக்கு தலா 50,000  வரை  பரிசுத்தொகை மற்றும் விருதுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைய தள முகவரியில் பார்க்கவும்.

https://nhrc.nic.in/document/nhrcs-short-film-competition-%E2%80%93-2023

  இணைப்பில் உள்ள PDFல்  மேலும் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://nhrc.nic.in/sites/default/files/Short_Films_2023.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *