
சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் “என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச” மையல் திரைப்பட முதல் தனிப் பாடல்
ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி (அனுபமா விக்ரம் சிங், வேணுகோபால் R ) தயாரித்து வழங்கும் மையல் திரைப்படத்திலிருந்து முதல் தனிப் பாடல் வெளியாகி உள்ளது. ஏபிஜி ஏழுமலை அவர்கள் இயக்கியுள்ள இந்த படத்தில் சேது, சம்ரிதி தாரா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் திரு. சௌந்தர்யன் அவர்களின் புதல்வன் S. அமர்கீத் அவர்கள் அறிமுக இசையமைப்பாளராக இசையமைத்துள்ள இந்த பாடலை கவிஞர் ஏகாதேசி அவர்கள் எழுதியுள்ளார். சரிகம தமிழ் வெளியிட்டுள்ள இந்த பாடல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச
கத்துறேன் தூங்கவில்லை
கண்ணாடி சில்லா
கத்தாழை முள்ளா
குத்துறே தாங்கவில்லை
என்ற பாடல் வரிகளோடு வலம் வந்து கொண்டிருக்கும் இந்த பாடல் மிகச் சிறந்த இன்னிசை பாடலாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர். சத்ய பிரகாஷ், வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர்.
அறிமுக இசையமைப்பாளர் அமர்கீத் அவர்களுக்கு திரை மொழி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Single release link: