சென்னை உலக சினிமா விழாவில் மூன்று நாள் கொண்டாட்டம் நிறைவுற்றது. இதையொட்டி உலக சினிமா பாஸ்கரன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நிறைவு நாள் விழாவில் எனது நண்பர் கவிஞர் தேவேந்திர பூபதி அவர்கள் கலந்து கொண்டு விழாவை பாராட்டி பேசி விழாவிற்கு உறுதுணையாக செயல்பட்ட செயல் வீரர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவித்தார்.
எங்கள் அழைப்பினை ஏற்று சென்னை உலக சினிமா விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அனைத்து ஆளுமைகளுக்கும், பார்வையாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும், செய்தி ஊடகத்துறை நண்பர்களுக்கும், உண்மையாக உழைத்த உத்தமர்களுக்கும், தேவி கருமாரி திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்க ஊழியர்கள், மற்றும் நிதி அளித்து உதவிய நல்லவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
படக் குறிப்பு: சென்னை உலக சினிமா விழா திரைப்படங்களை சிறந்த முறையில் பார்வையாளர்களுக்கு திரையிட்டு காண்பித்த நண்பர் ராஜா அவர்களுக்கு, கவிஞர் தேவேந்திர பூபதி அவர்கள் கேடயம் வழங்கி சிறப்பிக்கும் காட்சி.
( கடந்த பத்து நாட்களாக தினமும் இரவு 12 மணிக்கு மேல் விழித்திருந்து நாங்கள் தரும் டிசிபி ஹார்ட் டிஸ்க் தேவி கருமாரி திரையரங்க ப்ரொஜெக்டர் ஏற்றுக் கொள்ளகிறதா; சப்டைட்டில் வருகிறதா; 5.1 ஒலி சரியாக கேட்கிறதா என அனைத்தையும் சோதித்து பார்த்தார்.
இவற்றை செய்து முடித்து தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு தான் தூங்கச் செல்வார்.)
அன்புடன்
உலக சினிமா பாஸ்கரன்