பொதுவாவே, மனுசனுக்கு கூட ஒரு ஆள் ஒத்தாசைக்கு இல்லேன்னா பொழப்பும் நடக்காது, பொழுதும் போகாது(மொரட்டு சிங்கிள்கள் உள்பட). அதனால தான் MAN IS BY NATURE A SOCIAL(மீடியா) ANIMALன்னு சொல்றாங்க. இந்த காலத்துல யாருங்க மனுசங்கெல்லாம் ஒத்தாசையா இருக்கிறாங்க?ன்னு நினைச்சு நிறைய பேர் வளர்ப்பு பிராணிகளோட வாழ பழகிக்கிட்டாங்க(கொரோனாவோட வாழ பழகிக்கிட்ட மாதிரி!).

  அந்த வளர்ப்பு பிராணிகள் லிஸ்ட்ல நம்ம ஊர் நாட்டு நாய்கள்ல இருந்து வெளிநாட்டு (Exotic) பிராணிகள் வரை எல்லாமே அதுல அடங்கும்(அடக்கம்). இதுவே, கொஞ்சம் கையில காசு இருந்து டெக்னாலஜி தெரிஞ்சவங்களா இருந்தா, சாப்பாட்டுக்கு பதிலா சார்ஜ் போட்டாலே போதும், நல்லா உதவி பண்ணும்னு, சில டெக்னிகல் டிவைஸ்(ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ்) வாங்கி வெச்சுக்கிறாங்க.. ALEXA, ALICE, மாதிரி.  

  அந்த மாதிரி சில பேர், சிரி(SIRI) .. சிரி(SIRI). ன்னு ஃபோன்கிட்ட ஸ்பீக்கர்ல சீரியஸா உதவி கேட்டு பேசுறவங்களை தெருவுக்கு நாலு பேர நீங்க பாக்கலாம்.. இப்படித்தான் அன்னைக்கி ஒரு நாளு ஒரு அம்மா, அந்த சிரி(க்கி)யோட பேசாம என் புருஷன் எந்த வேலையும் செய்யிறது இல்லைன்னு போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கவே போய்டுச்சாம்!!.

  நம்ம அண்ணாச்சி இல்ல.. அவர் கூட இது மாதிரி ஒண்ணு வாங்கி வெச்சிட்டு, “A/C ஆன் பண்ணு”, “டிக்கெட் புக் பண்ணு”ன்னு வேலை வாங்கிக்கிட்டுருந்தாரு. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, சலிச்சுப்போய் ஏதாவது புதுசா வேணும்னு அடம்புடிச்சி, எமிரேட்ஸ் ஏரோபிளேன் பிடிச்சு, நேரா ஜப்பானுக்கு போய், ஒரு அட்வான்ஸ் மாடல்(!) ரோபோ (உடனே பெண் ரோபோவான்னு கேட்க கூடாது!) வாங்கிக்கட்டு வந்துட்டாரு.

  நல்ல ஒரு புரோகிராம்ரை பிடிச்சிட்டு வந்து தனக்கு எடுபிடி வேலையிலிருந்து அக்கவுண்டஸ் வரை எல்லா வேலை(ளை)யும் பாக்கிற மாதிரி அந்த ரோபோவை தயார் பண்ணிட்டாரு. இப்பெல்லாம், புதுசு புதுசா BRANCH மட்டுமில்ல, புதுசு புதுசா பிசினஸும் பண்ண ஆரம்(பிச்சுட்டார்) அண்ணாச்சி. அண்ணாச்சிசெம ஹேப்பி.

  ஒரு நாள் காலையில அண்ணாச்சி கிட்ட வேலை பாத்த பழைய ஆள் பழனி, திருப்பதியில வச்சிருக்கிற தன்னோட கடை பிசினஸ் டெவலப் பண்ண கடன் கேட்டு வந்தாரு.. அண்ணாச்சி குளிச்சிக்கிட்டு இருந்ததால, ரிசப்ஷன்ல இருந்த ரோபோ, அந்த ஆளோட பேர், விலாசம் எல்லாம் கேட்டு, பழைய அக்கவுண்டஸ் எல்லாம் செக் பண்ணிப் பார்த்துட்டு, ஏற்கனவே ஒரு முறை அண்ணாச்சிக்கிட்ட ஒரு பெரிய அமெளண்ட் வாங்கிட்டு அதை தராம மொட்டை போட்ட பழனியை பார்த்து, பழைய பாக்கியை ஞாபகப்படுத்த, சிக்கிக்கிட்ட பழனி அண்ணாச்சிக்கிட்ட சொல்லாமலேயே திருப்பதிக்கு பறந்து போய்ட்டாரு.

  அண்ணாச்சி கடையில ஆரம்பிச்சு, ஊரெல்லாம் இப்ப இந்த ரோபோவை பத்தி தான் பேச்சு. விஷயம் கேள்விப்பட்டு அண்ணாச்சியோட ஃப்ரெண்ட் ஒருத்தர் பிசினஸ் பேசுற சாக்குல பேச்சு கொடுத்து நம்மளும் அந்த மாதிரி ரோபோ ஒண்ணு வாங்கி பெரிய ஆள் ஆகணும்னு பிளான் பண்ணி அண்ணாச்சி வீட்டுக்கு அவர பார்க்க வந்தாரு.

  அந்த ரோபோவோட திறமைய சோதிக்க, அண்ணாச்சியோட அனுமதியோட அதுக்கு சின்ன சின்ன வேலையெல்லாம் வெச்சாரு, அடிப்படை வேலையெல்லாம் சும்மா அநாயசமா செஞ்ச ரோபோவை பாத்து, இப்படி அசராம வேலை பாக்குதேன்னு அவரு அசந்து போய்ட்டாரு..

  ஏன் அண்ணாச்சி? இது கணக்கு கூட போடுமாமே? நான் கையில் பழைய அக்கவுண்டஸ் வெச்சுருக்கேன்.. இதப் படிச்சு பாத்துட்டு, நான் எவ்வளவு டேக்ஸ் கட்டனும்னு இதால சொல்ல முடியுமான்னு? கேட்டாரு.

 அண்ணாச்சியும் ஓகேன்னு சொல்ல எல்லா அக்கவுண்ட்ஸையும் ஸ்கேன் பண்ணி கால்குலேட் பண்ணிட்டு, ரோபோ அண்ணாச்சிக்கிட்ட,

  உங்க ஃப்ரெண்ட் 3 வருஷம் அக்கவுண்டஸ் கொடுத்துருக்காரு. அது படி, மொத வருஷம் கட்ட வேண்டியது வரி 10 கோடி, அதை கட்டமா பழைய கப்பல் ஒண்ணு வாங்கி உடைச்சு நஷ்ட கணக்கு காமிச்சதுல லாபம் 6 கோடி. போன வருஷம் அதே மாதிரி படம் எடுத்து நஷ்ட கணக்கு காமிச்சதுல லாபம் 5 கோடி. அப்புறம்..

  “போதும் ,,, போதும் .. அண்ணாச்சி .. எம் பேர நாறடிச்சிறும் போல.. .நிறுத்த சொல்லுங்க.. மொதல்ல, நான் கொடுத்த கணக்கை மறந்துட சொல்லுங்க.. நான் வரேன்”னு,

  ரோபோ கொடுத்த காஃபியை கூட குடிக்காம, தான் கொடுத்த அக்கவுண்ட்ஸ் காப்பிய ரோபோகிட்டருந்து புடிங்கிக்கிட்டு வேகமா நழுவி ஓடிட்டாரு அண்ணாச்சியோட ஃப்ரெண்ட். அண்ணாச்சி அவர் கொடுத்த அக்கவுண்ட்ஸ ரோபோகிட்ட சொல்லி டெலீட் பண்ணிட்டு கூடவே அவரையும் அன்-ஃப்ரெண்ட் பண்ண சொல்லிட்டாரு ஃபேஸ் புக் அக்கவுண்டல.

———————————————-The END—————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *